தமிழ்நாடு முழுவதும் இந்த பதவிகளுக்கு 2 லட்சத்து 27 ஆயிரத்து 982 பேர், குரூப்-1ஏ பதவிக்கு 6 ஆயிரத்து 465 பேர், குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ பதவிக்கு 14 ஆயிரத்து 849 பேர் என மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரத்து 296 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ முதல்நிலை போட்டித் தேர்வு நேற்று நடைபெற்றது.
காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெற்றது. குறிப்பாக, ஈரோடு மாவட்டத்தில் அத்தேர்வினை எழுத 7,651 பேர் நுழைவு சீட்டு வழங்கி அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில், 5,796 பேர் தேர்வு எழுதினர். மேலும், 1,855 பேர் தேர்வு எழுத வரவில்லை.