ஈரோடு மாநகராட்சியில் 2025-2026 நிதியாண்டுக்கான சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி, குப்பை வரி உள்ளிட்டவை வசூலிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் வரி வசூலிக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், விடுமுறை நாட்களிலும் வரி வசூல் மையங்கள் செயல்பட்டன. ஜி பே, போன் பே செயலிகள் மூலமாகவும், 60 வார்டுகளில் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் நடமாடும் வாகனங்கள் மூலமாகவும் வரி வசூலிக்கப்பட்டது. தற்போது வரை 55% வரி வசூலாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.