சட்ட விரோதமாக மது விற்ற 3 பேர் கைது ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மதுவிற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் தீவிரமாக ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னிமலை பகுதியில், ஈரோடு டவுன் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மது விற்பனையில் ஈடுபட்டிருந்த சென்னிமலையைச் சேர்ந்த நாகராஜ் (58) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 26 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோன்று, கவுந்தம்பாடி அடுத்த பெருந்தலையூரில் மது விற்பனையில் ஈடுபட்ட அதேப்பகுதியைச் சேர்ந்த மதியழகனை (39) கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 10 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர். சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் அருகே, கர்நாடக மது கடத்தி வந்த ஈரோடு சூரியம்பாளையத்தைச் சேர்ந்த மாதேஸ்வரன் (30) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.