ஈரோட்டில் போதைப்பொருள் 3 பேர் கைது

ஈரோடு-சத்தி ரோடு, சூளை பகுதியில் பேக்கரியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடை உரிமையாளர் துரைசாமி (56) கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 1.347 கிலோ புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், மொடக்குறிச்சி எழுமாத்தூர் பகுதியில் புகையிலை விற்ற பிரசாந்த் (20) கைது செய்யப்பட்டு, 320 கிராம் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. சிவகிரி பகுதியில் சட்டவிரோத மது விற்பனை செய்த கல்யாணசுந்தரம் (49) கைது செய்யப்பட்டு, 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி