ஈரோட்டில் 200 ஆண்டுகால கந்தூரி விழா (வீடியோ)

ஈரோடு லக்காபுரம் புதிய பேருந்து நிலையம் பின்புறமுள்ள கந்தூரிக்காட்டில், கந்தூரி விழா கூட்டுப் பிரார்த்தனை நேற்று கோலாகலமாக நடைபெற்றது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஈரோட்டில் காலரா நோய் பரவியபோது, மக்கள் இந்த இடத்தில் தங்கிப் பிரார்த்தனை செய்ததால் நோய் நீங்கியது. அதன் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது. நூற்றுக்கணக்கான குடில்கள் அமைத்துச் சமைக்கப்பட்ட உணவுகள் மக்களுக்குத் தானமாக வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி