தமிழகத்தில் உள்ள பல லட்சம் நெசவாளர் குடும்பங்களின் நலன் கருதி, கீழ்க்கண்ட முக்கிய கோரிக்கைகளை பாஜக தேர்தல் அறிக்கையில் சேர்க்க 'தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு' சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மின்சாரம், நிதி, ஜிஎஸ்டி, விற்பனை, அரசு கொள்முதல், நிர்வாகம் என 16 அம்சங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. விசைத்தறிக்கு 1000 யூனிட், கைத்தறிக்கு 300 யூனிட் இலவச மின்சாரம், நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி ரீஃபண்ட் மற்றும் அபராதத் தொகை வழங்கல், நெசவுத் தொழிலுக்கு வட்டியில்லா கடன், நவீன இயந்திரங்களுக்கு 50% மானியம், விசைத்தறி துணிகளுக்கென தனி விற்பனை தளம் மற்றும் வாரியம் அமைத்தல், அரசு பள்ளி சீருடைகள் மற்றும் அனைத்து துறை துணிகளும் தமிழக நெசவாளர்களிடமே கொள்முதல் செய்தல், மாவட்ட ஆட்சியர் தலைமையில் குறைதீர் கூட்டம், விசைத்தறிக்கு தனி ஆணையர் நியமித்தல் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தமிழக நெசவாளர்களின் குரலாக இக்கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் உறுதிப்படுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.