ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளில் சுமார் 24 ஆயிரம் தெரு நாய்கள் உள்ளன. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், வெறி நாய் தடுப்பூசி மற்றும் கருத்தடை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு மட்டும் 15,000 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக மாநகராட்சி அதிகாரி கௌரி சரவணன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தெரு நாய்களால் ஏற்படும் தொல்லைகளுக்கும், நோய்கள் பரவுவதற்கும் கட்டுப்பாடு கொண்டுவரப்படுகிறது.