கோபி வடுகபாளையம்புதூர் பகுதியைச் சேர்ந்த தருண்குமார் (25) இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான 16 வயது மாணவியை கடந்த 2023 ஜனவரியில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மாணவி பேசுவதை நிறுத்தியதால், புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் 2023 பிப்ரவரி 8 அன்று தருண்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.