ஈரோடு திண்டல் வள்ளியம்மை நகரைச் சேர்ந்தவர் மூர்த்தி (38). மதுப்பழக்கத்திற்கு அடிமையான அவர், வீட்டிற்கு பணம் கொடுக்காமல், தனது மனைவி பவளம் மணியுடன் (35) அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம், இரவு மது அருந்த தனது தாயாரிடம், மூர்த்தி பணம் கேட்டுள்ளார். இதற்கு அவரது தாயார் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் வேதனை அடைந்த மூர்த்தி, வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பவளம் மணி அளித்த புகாரின் பேரில், ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.