பவானிசாகர் அருகே பெல்ட்டில் கை சிக்கி தொழிலாளி படுகாயம்

பவானிசாகர் அருகே பெல்ட்டில் கை சிக்கி தொழிலாளி படுகாயம் ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே அக்ஷரா பேப்பர் மில் செயல்படுகிறது. இங்கு சத்தியமங்கலம், ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த ரேணுகேந்திரன் (40) என்பவர் ஓயர் பேயராக வேலை செய்து வருகிறார். இன்று மாலை கம்பெனியில் வேலை செய்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பெல்ட்டில் கை சிக்கி படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கொத்தமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். பவானிசாகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி