குடிநீர் வழங்கக்கோரி. அப்போது பெண்கள் கூறும்போது, விண்ணப்பள்ளி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் பகுதிக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது ஆனால் நடந்த ஒரு வாரமாக கே.வி.கே. காலனி பகுதிக்கு சரியாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால் நாங்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகிறோம். இதுதவிர எங்கள் பகுதியில் உள்ள தெருவிளக்கும் சரியாக எரிவதில்லை.
இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் சிறுவர், சிறுமிகள், பெண்கள் அச்சப்படுகிறார்கள். எனவே குடிநீர் வழங்கவும், தெருவிளக்கு பொருத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அதற்கு போலீசார், 'விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று உறுதி அளித்தனர். அதை ஏற்றுக்கொண்ட பெண்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.