தாளவாடி அருகே, காலை நேரத்தில் ஒற்றை யானை ஊருக்குள் உலா வந்துள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனர். காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது. நேற்று (மே 17) காலை நஞ்சுண்டசாமி என்பவரின் கரும்பு தோட்டத்தில் 2 யானைகள் புகுந்தன. சுமார் 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பொதுமக்கள் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். யானைகள் விவசாய நிலங்களில் நுழைவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.