சத்தியமங்கலம்: விவசாய பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானை

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள ஜீர்கள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட கல்மண்டிபுரம் பகுதியில், மாதேவா (55) என்ற விவசாயியின் தென்னை மற்றும் வெங்காயப் பயிர்களை ஒற்றை காட்டு யானை சேதப்படுத்தியுள்ளது. இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை, சுமார் 3 மணி நேரம் அட்டகாசம் செய்து, 5 தென்னை மரங்களையும் அரை ஏக்கர் வெங்காயப் பயிரையும் நாசம் செய்தது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயி கண்ணீருடன் வனத்துறை உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி