சத்தியமங்கலம் அருகே ஆசனூர் வனச்சரகத்தில், உணவு தேடி அடிக்கடி சாலையை கடக்கும் யானைகள் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகின்றன. திங்கள் இரவு, சத்தியமங்கலத்துக்கு காரில் சென்ற 4 பேர், அரேபாளையம் பிரிவு அருகே சென்றபோது வனப்பகுதியில் நின்றிருந்த காட்டு யானை காரை வழிமறித்து, முன் பக்க கண்ணாடியை துதிக்கையால் தட்டியது. இதனால் காரில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். பின்னர் யானை வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.