இந்நிலையில் பண்ணாரி வனப்பகுதியில் கோடை மழை இல்லாததால் வனப்பகுதியில் புல்கள், மரங்கள், செடிகள், கொடிகள் வறண்டு வருகின்றன. இங்குள்ள தடுப்பணைகள், குளங்கள், குட்டைகளில் கோடை வெயில் காரணமாக தண்ணீர் வற்றி வருவதால் வனவிலங்குகள் போதுமான தண்ணீர் இன்றி உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் அலைகின்றன. இந்த நிலையில் சத்தி - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் காட்டெருமைகள் கூட்டமாக தண்ணீர் தேடி கூட்டமாக சுற்றிக் கொண்டிருந்தன. இவைகள் இரவு நேரங்களில் வனவிலங்குகள் சாலையை கடக்கும் போது வாகனங்களில் அடிபட்டு இறப்பதும், கிராமங்களில் உள்ள கிணறுகளில் தவறி விழும் சம்பவங்களும் நடந்து வருகிறது.
இது குறித்து வன ஆர்வலர் கூறும்போது கோடை காலம் துவங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் தண்ணீர் தேடி காட்டெருமைகள் சாலையை கடந்து செல்கின்றன. வனத்துறையினர் வனவிலங்குகளுக்கு தேவையான தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் வனப்பகுதியில் உள்ள சாலையை பயன்படுத்துவோர் வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.