பவானிசாகர் அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி நீரும், தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 700 கன அடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 5 கன அடி நீரும் என மொத்தம் 855 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. இதைப்போல் மாவட்டத்தில் உள்ள அணைப்பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் மற்ற அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் 25.74 அடியாக உயர்ந்துள்ளது. இதேபோல் வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 24.48 அடியாக உள்ளது. 30 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 15.98 அடியாக உள்ளது. மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மைதானத்தில் ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி