பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்வு

ஈரோடு மாவட்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82. 28 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 2, 523 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பவானிசாகர் அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி நீரும், தடப்பள்ளி -அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 700 கன அடியும்,
கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 5 கன அடி நீரும் என மொத்தம் 855 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதை போல் மாவட்டத்தில் உள்ள அணைப்பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் மற்ற அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் 25. 77அடியாக உயர்ந்து உள்ளது. இதேபோல் வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 24. 67 அடியாக உள்ளது. 30 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 16. 07 அடியாக உள்ளது. மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி