இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனினும் தொடர்ந்து அணையில் இருந்து பாசனத்திற்காக அதிக அளவு நீர் திறக்கப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 1,104 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 81.10 அடியாக உள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 900 கனஅடி, கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 0 கனஅடி என மொத்தம் 1100 கனஅடி தண்ணீர் பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டு வருகிறது.