இந்நிலையில் தாளவாடி வட்டம் ஆசனூர் அடுத்த ஒங்கல்வாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரவிக்குமார் என்பவரது பசுமாட்டை தோட்டத்தில் கட்டி வைத்திருந்த நிலையில் நேற்றைய முன்தினம் இரவு வனத்தில் இருந்து வெளியேறிய சிறுத்தை பசுமாட்டை தாக்கி கொன்றது. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
மேலும் ஆசனூர் பகுதியில் நீண்ட நாட்களாக ஊருக்குள் நுழைந்து வேட்டையாடி வரும் சிறுத்தையை வனத்துறையினர் உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.