திம்பம் மலைப்பாதையில் இரு அரசு பஸ்கள் மோதல்

கோவையிலிருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு, தமிழக அரசு பஸ், 80 பயணிகளுடன் நேற்று(மார்ச் 15) புறப்பட்டது. சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதை வழியாக, 2:00 மணிக்கு சென்றது. அதேசமயம் எதிரே மைசூருவிலிருந்து திண்டுக்கல்லுக்கு, கர்நாடக மாநில அரசு பஸ், 80 பயணிகளுடன் வந்தது. மலைப்பாதையின், 23வது கொண்டை ஊசி வளைவில் எதிர்எதிரே வந்தபோது எதிர்பாராதவிதமாக பக்கவாட்டில் இரு பஸ்களும் மோதிக்கொண்டன. இதில் பயணிகள் காயம் அடையவில்லை. அதேசமயம் மலைப்பாதையில், 45 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி