திம்பம் மலை பாதையில் போக்குவரத்து பாதிப்பு

திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திம்பம் மலைப்பாதையில், வனவிலங்குகள் பாதுகாப்பு மற்றும் விபத்துகளைத் தவிர்க்க இரவு நேர போக்குவரத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 12 சக்கரங்களுக்கு மேல் உள்ள கனரக வாகனங்கள் மற்றும் 16.2 டன்னுக்கு மேல் எடையுள்ள வாகனங்களுக்கு எப்போதும் அனுமதி இல்லை என்றும், லாரிகளுக்கு மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை தடை என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும், நீதிமன்ற உத்தரவை மீறி 20 முதல் 25 டன் எடை கொண்ட கனரக வாகனங்கள் சோதனைச்சாவடிகளைக் கடந்து செல்வதால், மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், வாகனங்கள் சாலையில் நிற்க நேரிட்டு, போக்குவரத்து தடைபடுகிறது.

தொடர்புடைய செய்தி