கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கோயமுத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த டீசல் டேங்கர் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லாரியில் இருந்த சுமார் 20,000 லிட்டர் டீசல் வீணாகக் கொட்டியது. அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் ஓட்டுநர் கௌதம் மற்றும் கிளீனர் உயிர் தப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆசனூர் காவல்துறையினர், வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீணாகக் கொட்டியுள்ள டீசலால் வனப்பகுதிக்குள் தீ பரவாமல் இருக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.