ஈரோடு வடக்கு மாவட்டம் பவானிசாகர் தெற்கு ஒன்றியம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா அவர்கள் நல்லூர் ஊராட்சி நல்லூர் கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் புதிய அங்கன்வாடி மையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். மதிப்பீடு ரூ.17,00,000. இந்நிகழ்வில் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என். நல்லசிவம், பவானிசாகர் தெற்கு ஒன்றிய செயலாளர் (தலைவர், மாதம்பாளையம் முன்னாள் ஊராட்சி மன்றம்) என். காளியப்பன் கலந்து கொண்டனர்.