சத்தியமங்கலம், தாளவாடி அருகே மல்லன்குழியில் உள்ள தமிழ்புரம் குட்டையில் நேற்று (நவ.22) ஒரு ஆண் சடலம் மிதந்தது. தாளவாடி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். உயிரிழந்தவர் பையனாபுரத்தைச் சேர்ந்த பெள்ளையா (65), கூலித் தொழிலாளி என்பது தெரியவந்தது. சாலைப் பணிக்குச் சென்ற அவர், மதியம் கை-கால் கழுவ குட்டைக்குச் சென்றபோது தவறி விழுந்து உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.