ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி சாலையில் புலி வாகனத்தை துரத்துவதாக சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ குறித்த தகவலை தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் மறுத்துள்ளது. இது முற்றிலும் தவறான தகவல் என்றும், கடந்த அக்டோபர் 5-ந்தேதி மராட்டிய மாநிலம் தடோபா அந்தரி புலிகள் சரணாலய வனப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட வீடியோ இது என்றும், சத்தியமங்கலம் என தவறாக பரப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.