ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடி மலைப்பகுதியில் நேற்று மாலை திடீரென கார்மேகம் திரண்டு கனமழை பெய்தது. இதனால் ஆசனூர் மற்றும் திம்பம் பகுதிகளில் மழை நீர் அருவி போல் பல இடங்களில் கொட்டியது. இதை அப்பகுதியில் சுற்றுலா சென்றவர்கள் தங்கள் செல்போன்களில் படம் பிடித்து நண்பர்களுக்கு அனுப்பினர். மழையால் கொடி அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது. சுற்றுலாப் பயணிகள் மழையில் நனைந்தபடியே அருவியில் குளித்து மகிழ்ந்தனர். இதனால் அப்பகுதியில் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. விவசாயிகளும் பொதுமக்களும் இந்த மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.