ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாக்கு ஏலம்

ஈரோடு விற்பனைக் குழுவின் கீழ், சத்தியமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் பிற்பகல் 2 மணிக்கு மின்னணு தேசிய வேளாண் சந்தைத் திட்டத்தின் கீழ் பாக்கு ஏலம் நடைபெறுகிறது. பாக்கு பயிரிடும் விவசாயிகள் இந்த ஏலத்தில் கலந்துகொண்டு தங்கள் விளைபொருட்களுக்கு அதிக விலை பெற்று பயனடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு விற்பனைக் கூட கண்காணிப்பாளரை அணுகலாம். ஆதார் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல்களை கொண்டு வர வேண்டும்.

தொடர்புடைய செய்தி