ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோவிலில் இருந்து திம்பம் வரை 15 கி.மீ. மலைப் பாதையில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி நடைபெற்றது. Erode Nature lovers குழுவைச் சேர்ந்த 200 தன்னார்வலர்களும் வனத்துறையினரும் இணைந்து இந்த பணியில் ஈடுபட்டனர். இதன் மூலம் வனவிலங்குகள் பிளாஸ்டிக்கை உட்கொள்வது தடுக்கப்பட்டு, மண்வளம் மற்றும் சுகாதாரம் பாதுகாக்கப்படும். எனவே, அப்பகுதியில் யாரும் பிளாஸ்டிக் கழிவுகளை வீச வேண்டாம் என வனத்துறையினர் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.