ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த சத்தியமங்கலம் புலிகள் காப்பகவனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது கோடைமழை பெய்து வனப்பகுதி பசுமையாக காணப்படுகிறது. இதனால் யானைகள் கூட்டம் கூட்டமாக வனப்பகுதியில் சுற்றிவருகின்றன. தண்ணீர் குடிக்க தண்ணீர்குட்டைகளுக்கு செல்லும்போது ரோட்டோரமாக உலாவருவது வழக்கமாக உள்ளது. அவ்வப்போது வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாயநிலங்களுக்குள் புகுந்து பயிரைதின்று, பயிர்களைசேதப்படுத்திவிட்டு வனப்பகுதியில் சென்றுவிடுகின்றன. இந்நிலையில் தாளவாடி அடுத்த பழைய ஆசனூரில் விவசாயம் செய்து வரும் ராஜண்ணா என்பவரது விவசாய நிலத்தில் நேற்று இரவு நுழைந்த ஒற்றைக்காட்டுயானை டிராக்டரை முட்டிதள்ளிய பின்பு, அருகிலிருந்த தண்ணீர்தொட்டியில் தண்ணீர் அருந்திவிட்டு சென்றது.
இதனால், கிராமமக்கள் வெளியே நடமாடமுடியாமல் பீதி அடைந்துள்ளனர். வனத்துறையினர் யானையை அடர்ந்த வனப்பகுதியில் விரட்டிவிடவேண்டும் என அப்பகுதிவிவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்த சிசிடிவிகாட்சிகள் தற்போது வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.