இத்தம்பதிக்கு வித்யாபாரதி (3) என்ற குழந்தை உள்ளது. தம்பதிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் கடந்த ஓராண்டுக்கு முன்பு விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்தனர். இதனால், இலக்கியா தனது மகள் வித்யாபாரதியுடன், தனது தந்தை நாகராஜ் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 15ம் தேதி காலை 9.30 மணிக்கு மகளுடன் சென்ற இலக்கியா, பின்னர் வீடு திரும்பவில்லை.
பின்னர் அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, தாய் ஈஸ்வரி அளித்த புகாரின் பேரில், மாயமான இலக்கியா மற்றும் அவரது மகள் வித்யாபாரதியை, சத்தியமங்கலம் போலீசார் தேடி வருகின்றனர்.