ஈரோடு மாவட்டம், புளியம்பட்டி அடுத்த பனையம்பள்ளியில் வட மாநில இளைஞர் ஜுபீர் கட்டிடம் கட்டும் வேலை செய்து வந்துள்ளார். நேற்று (ஜூன் 15) நான்கு பேர் இரண்டு பைக்கில் வந்து ஜுபீரை மிரட்டி அவருடைய செல்போனை பறித்து தப்பியோடி முயன்ற போது சத்தம் போட்டுள்ளார். அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஒருவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த பண்ணாரி (21) என தெரியவந்தது. மேலும், தப்பியோடிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.