சத்தியமங்கலம்:லாட்டரி விற்றவர் கைது; போலீசார் நடவடிக்கை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் போலீசார் வடக்குப்பேட்டையில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் கேரள மாநில லாட்டரி சீட்டை ஆன்லைனில் விற்றதாக பெரியசாமி (வயது 40) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து லாட்டரி விற்ற பணம் ரூ. 6 ஆயிரத்து 200 மற்றும் ஸ்கூட்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி