சத்தியமங்கலம்: மரத்தில் அமர்ந்திருந்த சிறுத்தை புலி

ஆசனூர் அருகே நேற்று (மார்ச் 3) மாலை  சாலையோரம் இருந்த மரத்தில் சிறுத்தை படுத்திருந்தது. இதை அவ்வழியாக சென்ற பயணிகள் வீடியோ எடுத்தனர். பட்டபகலில் சாலையில் சிறுத்தை நடமாடியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். திம்பம், ஆசனூர், கேர்மாளம் சாலையில் சிறுத்தை தொடர்ந்து உலா வருவதால், வனப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்தவோ, இறங்கவோ கூடாது என்றும், எச்சரிக்கையுடன் செல்லுமாறும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி