இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 3) அதிகாலையில் தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சிறுத்தைபுலி ஒன்று கடக்க சாலையை முயன்றது, வாகனத்தில் இருந்தவர்கள் சிறுத்தைபுலியைப் பார்த்து பீதி அடைந்தனர்.
உடனே அவர்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு சிறுத்தைபுலியை செல்போனில் படம் பிடித்தனர். பின்னர் சிறிது நேரத்தில் சிறுத்தைபுலி அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்று விட்டது. தற்போது இந்த வீடியோ தாளவாடி மலைப்பகுதியில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் திம்பம் மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டுமென வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.