சத்தி புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆசனூர் அருகே, ஆசனூர் - அரேப்பாளையம் சாலையில் சிறுத்தை ஒன்று சாலையோரமாக நடந்து சென்ற காட்சி, காரில் சென்றவர்களால் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ள இந்த பகுதிகளில் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.