ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சிறுத்தை, புலி, யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. நேற்று தெங்குமரடா பகுதியில் ஒரு புலி நடந்து சென்றதை அப்பகுதி மக்கள் தங்கள் செல்போன்களில் படம் பிடித்தனர். இதனால் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.