சத்தியமங்கலத்தில் நேற்று நடைபெற்ற பூ மார்க்கெட் ஏலத்தில், சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 3 டன் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில், மல்லிகைப்பூ கிலோ ₹6,700-க்கும், முல்லைப்பூ கிலோ ₹2,000-க்கும், காக்கட்டான் பூ ₹1,200-க்கும், செண்டுமல்லி ₹40-க்கும், கனகாம்பரம் ₹650-க்கும், அரளிப்பூ ₹100-க்கும், துளசி ₹60-க்கும் விற்பனை செய்யப்பட்டன. பனிப்பொழிவு காரணமாக உற்பத்தி குறைந்துள்ளதாலும், தேவைகள் அதிகரித்துள்ளதாலும் விலை உயர்ந்துள்ளது.