ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புஞ்சைபுளியம்பட்டியில் சித்தி விநாயகர், தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஐயப்பனுக்கு சபரிமலையில் உள்ளது போன்று 18 படிகள் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் முதல் சனிக்கிழமை 18ம் படி திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படும் பதினெட்டாம் படி நிகழ்ச்சியில் ஆண், பெண் இருபாலரும் 18-ம் படி ஏற அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி இன்று காலை கோவில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமத்துடன் ஐயப்பனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து 108 சங்காபிஷேகம் மற்றும் விசேஷ பூஜைகள் நடந்தன. இதை தொடர்ந்து குருசாமி முன்னிலையில் 18ம் படி திறக்கப்பட்டது.
தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடும்.. ஜெயந்திலால் சலானி