தாளவாடி மலைப்பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை

சத்தி அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் வெயிலின் தாக்கம் காரணமாக பகல் நேரங்களில் வெயில் வாட்டி வந்தது. பகல் நேரங்களில் சூடான காற்று வீசியதால் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. இந்நிலையில், தாளவாடியில் சுற்றுவட்டார பகுதியில் மாலை பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

மழையால், வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். கனமழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதே போல் சத்தி சுற்றியுள்ள பகுதிகளில் சாரல் மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி