இக்கண்காட்சியை ஈரோடு சரக்கு உதவி அமலாக்க அலுவலர் கா. ரா. ஜெயவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்காட்சியை ரிப்பன் வெட்டி தொடக்கி வைத்தார். விழாவில் கைத்தறி கட்டுப்பாட்டு அலுவலர் ஜி. மாலதி மற்றும் இளநிலை தொழில் நுட்ப உதவியாளர் பரமசிவம் ஆகியோர் கலந்துகொண்டனர். இக் கைத்தறி கண்காட்சியின் மூலமாக நலிந்து வரும் கைத்தறி தொழிலை நவீனமயமாக்கி மேம்படுத்த வழிவகை செய்யப்படுகிறது. கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்பு மற்றும் மாணவர்களிடத்தில் சுய தொழில் தொடங்க ஆர்வம் மற்றும் வழிகாட்டுதல் மற்றும் கைத்தறி நெசவாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை புதிய தொழில் தொடங்குவதற்கு அரசு மானியம் மற்றும் அரசு தொழில் துறை அணுகுமுறை போன்ற விஷயங்கள் எடுத்துரைக்கப்பட்டன.
கூட்டணி பேச்சுவார்த்தை: அ.ம.மு.க. தவிர்க்க முடியாத சக்தி - தினகரன்