ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி, பவானிசாகர் பகுதியில் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள நான்கு கடைகளில் சோதனை நடத்தினார். அங்கு தமிழக அரசு தடை செய்த புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்ததாக நான்கு கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், கடைகளுக்கு தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டது.