நம்பியூா் அருகே அய்யம்மாள் (60) என்பவர், கடந்த 18-ஆம் தேதி இரவு வீட்டுக்கு வெளியே தென்னை மட்டைகளை அடுக்கி வைக்கும்போது, மட்டைகளுக்கு இடையே பதுங்கியிருந்த பாம்பு கடித்ததில் காயமடைந்தார். பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி பெற்று, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கடத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.