பவானியை அடுத்த சாணார்பாளையத்தைச் சேர்ந்த ராக்கம்மாள் (65) வீட்டில் இருந்து வெளியே சென்று காணாமல் போனார். அவரைத் தேடியபோது, அப்பகுதியில் உள்ள பள்ளியின் பின்புறத்தில் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது சடலம் கிடந்துள்ளது. இதுகுறித்து பவானி போலீஸார் விசாரணை நடத்தியதில், மதுபோதையில் இருந்த மகன் பழனிசாமி, அவதூறாகப் பேசியதால் ஆத்திரமடைந்து கல்லால் தாக்கி கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து, பழனிசாமியைக் கைது செய்த போலீஸார், அவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.