ஈரோடு-சாம்பல்பூர் சிறப்பு ரயில் சேவை மேலும் நீட்டிப்பு

ஈரோடு மற்றும் ஒடிசா மாநிலம் சாம்பல்பூருக்கு இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை மேலும் நான்கு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சாம்பல்பூரில் இருந்து ஈரோடு செல்லும் ரயில் (வண்டி எண்-08311) நாளை (புதன்கிழமை), 11, 18, 25 ஆகிய தேதிகளில் காலை 11.35 மணிக்கு இயக்கப்படும். ஈரோட்டில் இருந்து சாம்பல்பூர் செல்லும் ரயில் (வண்டி எண்-08312) 6, 13, 21, 27 ஆகிய தேதிகளில் மதியம் 2.35 மணிக்கு புறப்படும். இந்த ரயில்கள் பல்வேறு முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என சேலம் கோட்ட ரயில்வே தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி