ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், எங்களைப் பாராட்டுவதற்காக யாரும் கட்சி ஆரம்பிக்கவில்லை. பத்து கட்சிகள் எங்களை விமர்சனம் செய்தால்தான் நாங்கள் வளர்வதற்கான வாய்ப்பு ஏற்படும். டாஸ்மாக் கடைகளை வைத்திருக்க வேண்டும் என்பது திமுகவின் எண்ணம் கிடையாது. இது நீண்ட நாட்களாக நடைமுறையில் இருப்பதால், படிப்படியாகவே குறைக்க முடியும். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 விளம்பரத்திற்காக அல்ல, அது ஏழை எளிய குடும்பங்களுக்குப் பேருதவி என்றார்.