ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் நேற்று ரோந்து பணியின்போது, புளியங்கொம்பை அருகே இரண்டு யானைகள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. கால்நடை மருத்துவர் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட உடல் கூறு ஆய்வில், 30 வயதுடைய ஒரு பெண் யானை நோய்வாய்ப்பட்டு இறந்ததும், மற்றொன்று அதன் குட்டியாகவும் இருக்கலாம் என தெரியவந்துள்ளது. இறந்த யானைகளை மற்ற வனவிலங்குகளுக்கு உணவாக அங்கேயே விடப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.