சம்பவத்தன்று இவர்கள் 3 பேரும் சொந்தவேலை விஷயமாக மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். நடராஜா மோட்டார் சைக்கிளை ஓட்டினார். மற்ற 2 பேரும் பின்னால் உட்கார்ந்திருந்தனர். சத்தியமங்கலம்- பண்ணாரி ரோட்டில் கோம்புபள்ளம் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோர மின் கம்பத்தில் மோதியது. இதில் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனே அவர்கள் 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அக்பர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். முதல் உதவி சிகிச்சைக்குக்கும் பின்னர் ராஜா, கண்ணன் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.