அரியப்பம்பாளையத்தில் தி. மு. க. இளைஞர் அணி பொதுக்கூட்டம்

அரியப்பம்பாளையத்தில் தி.மு.க. இளைஞர் அணி பொதுக்கூட்டம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையத்தில் பவானிசாகர் தொகுதி இளைஞர் அணி சார்பில் இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம் மற்றும் தொகுதி மறுசீரமைப்பில் அநீதி இழைப்பதை கண்டித்து பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு அரியப்பம்பாளையம் பேரூர் தி.மு.க. செயலாளர் வக்கீல் செந்தில்நாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம், திப்பம்பட்டி ஆறுச்சாமி, அரியப்பம்பாளையம் பேரூராட்சி தலைவர் மகேஸ்வரி செந்தில்நாதன் ஆகியோர் பேசினார்கள். இதில் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கே.சி.பி. இளங்கோ, முன்னாள் எம்.எல்.ஏ. எல்.பி. தர்மலிங்கம் மற்றும் பவானிசாகர் தொகுதி இளைஞர் அணியின் தி.மு.க. நிர்வாகிகள், உள்ளாட்சி உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் திருவேங்கடம் வரவேற்று பேசினார். முடிவில் ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நாசிர் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி