நலத்திட்ட உதவிகளை திமுக எம்பி வழங்கினார்

நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா ஈரோடு மாவட்டம் தாளவாடியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். கரளவாடி கிராமத்தில் யானை மிதித்து உயிரிழந்த மகேஷ் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். கெட்டவாடி கிராமத்தில் புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார். கரளவாடி, தாளவாடி பகுதியில் 2.61 கோடி மதிப்பிலான சாலை பணிகளையும் திறந்து வைத்தார். மேலும் 622 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை ஆட்சியர், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி