தாளவாடியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

தாளவாடியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக ஒன்றிய செயலாளர்கள் சிவண்ணா, நாகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசை வஞ்சித்து வரும் மத்திய அரசு மற்றும் அதற்கு துணைபோகும் அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குருசாமி, மகாதேவபிரசாத், சிவபிரசாத், சுப்புராஜ், பிரதம்லிங்கம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் இதில் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி